விழுப்புரம் அடுத்த மரகதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓட்டுநர் பார்த்தசாரதி. இவர் விழுப்புரம் கடைவீதியில் பொருள்களை வாங்கிவிட்டு அருகில் உள்ள தேனீர் கடையில் தேனீர் அருந்திக்கொண்டு தனது கைபேசியை தனது சட்டையின் பாக்கெட்டில் வைத்தார்.
இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர் அவரின் அருகே சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் அவருடைய கைபேசியை திருடிச் சென்றார். சிறிது நேரம் கழித்து தனது கைபேசி திருடு போனதை உணர்ந்த பார்த்தசாரதி, இது குறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பந்தப்பட்ட இடத்திலுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த காவல் துறையினர் செல்போனை திருடிய நபரை தேடி வருகின்றனர். தற்போது அந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பேருந்தில் பெண் குழந்தையை விட்டுச்சென்ற பெண் - சிசிடிவி காட்சி உதவியுடன் போலீஸ் விசாரணை