விழுப்புரம்: தந்தை பெரியார் நகரில் இயங்கி வரும் அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான பேக்கரி ஒன்று உள்ளது. அங்கு முகமூடி அணிந்த நபர்கள் பூட்டை உடைத்து நேற்று முன்தினம் (ஜூன் 30) கொள்ளையடித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில், கடையில் இருந்த ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
இதேபோல், அருகில் இருந்த மணி என்பவருக்கு சொந்தமான சிறிய பொட்டி கடையிலும் அன்றைய தினமே பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடியுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
அடுத்தடுத்து இரண்டு கடைகளில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது, அப்பகுதியினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போது, கொள்ளையடிக்கப்பட்ட கடையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன
இதையும் படிங்க: பாஜக அலுவலகத்திற்கு தீ - வெளியான சிசிடிவி காட்சிகள்