விழுப்புரம்: கடந்த 13ஆம் தேதி கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்நிலையில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார்(48), பள்ளியின் செயலாளரும், தாளாளரின் மனைவியுமான சாந்தி (44), பள்ளி முதல்வர் சிவசங்கரன்(57), வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா(40), கணித ஆசிரியை கீர்த்திகா(28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐந்து பேரும் சேலம் மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தங்களை பிணையில் விட வேண்டும் என்ற 5 பேரின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை நிராகரித்த நீதிபதி, வழக்கை முப்பது நிமிடங்கள் ஒத்தி வைத்தார். பின்னர் ஒருநாள் காவலில் மட்டுமே சிபிசிஐடி விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
அதன்படி இன்று 12 மணி முதல் நாளை மதியம் 12 மணி வரை விசாரணை 5 பேரிடமும் விசாரணை நடைபெறுகிறது. விசாரணை முடிந்து மீண்டும் நாளை மதியம் 12:00 மணியளவில் அவர்களை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: "படிப்பு செலவுக்காக கஷ்டப்படுத்திட்டேன்" - பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவி தற்கொலை!