விழுப்புரம்: மேல்மலையனூர் தாலுகா ஞானோதயம் கிராமத்திலுள்ள மாவட்ட எல்லை சோதனைச் சாவடியில் வளத்தி காவல் துறையினர் ஊரடங்கு காரணமாக வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், காவலர்கள் இன்று (ஜூன்.4) சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக சென்ற குளிர் சாதன சொகுசுப் பேருந்தினை மடங்கி சோதனை செய்தனர். அதில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் 65 கிலோ கஞ்சா மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 10 லட்ச ரூபாய் ஆகும்.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் நடராஜை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதுகுறித்து ஓட்டுநர் நடராஜனிடம் மேற்கொண்ட விசாரணையில், பீகாரிலிருந்து மதுரைக்குச் சென்று அங்கு கஞ்சாவை டெலிவரி செய்யவிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் காவல் துறையினர் கஞ்சாவையும், சொகுசுப் பேருந்தையும் பறிமுதல் செய்தனர். சொகுசுப் பேருந்தில் கஞ்சா மூட்டைகள் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ட்ரோன் கிருமிநாசினி தெளிப்பால் குறையும் கரோனா!