விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் கலைச்செல்வன்(38), ராமதாஸ்(48).
இதில் கலைச்செல்வன் சென்னை பெரம்பூர் மாநகர பேருந்து பணிமனையிலும், ராமதாஸ் ஆலந்தூர் மாநகர பேருந்து பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் இருவருக்குமிடையே பல வருடங்களாக சொத்து பிரச்சனை நீடித்து வந்த நிலையில், கடந்த 10 நாளுக்கு முன்பு தம்பி கலைச்செல்வன் வீட்டுருகே காலி இடத்தில் கழிவறை ஒன்றை கட்ட முற்பட்டுள்ளார். இதன்காரணமாக நேற்றிரவு அண்ணன், தம்பி இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரத்தில் அண்ணன் ராமதாஸ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் சேர்ந்து கலைச்செல்வனை ஈட்டியால் குத்திக் கொலை செய்தனர். மேலும் கலைச்செல்வன் மனைவி காயத்திரி, தாய் வாசுகி, தாய்மாமன் ஆகியோரை தாக்கியுள்ளனர்.
அவர்களை அருகிலிருந்தவர்கள் அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை செய்த பேருந்து ஓட்டுநர் ராமதாஸ் மற்றும் அவரது மகன்கள் இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.