ETV Bharat / state

ஆழ்துளை கிணறு அமைக்க வங்கிக்கடன்! - விழுப்புரம் ஆட்சியர் - Bank loan for farmers

விழுப்புரம்: விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை வங்கிக்கடன் வழங்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அறிவித்துள்ளார்.

விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க வங்கி கடன்!

author img

By

Published : Aug 18, 2020, 10:36 AM IST

தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்குப் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 விழுக்காடு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது.

புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சம் ஒரு லட்சம் வரை வங்கிக்கடன் அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின்படி 50 விழுக்காடு அரசு மானியம் அல்லது அதிகபட்சம் 50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க சாதிச்சான்று, வருமான சான்று, இருப்பிடச் சான்று ஆகியவை இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர் சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்றிதழ் வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெற வேண்டும். மேலும் நில உடமைக்கு ஆதாரமாக கணினிவழி பட்டா (நில உரிமை பதிவேடு), அடங்கல் நகல் இருக்க வேண்டும்.

இது குறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தகுதியுடைய விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளர்.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் நகலை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.