கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகள், வாகனங்களில் நேரடியாக கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நாள் ஒன்றுக்கு ஐந்து கிராமங்கள் வீதம் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர். இந்தப் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதற்கு முன்னதாக ஆட்சியர், பொதுமக்களிடம் கரோனா வைரஸ் குறித்து எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கை: வீட்டுக் கண்காணிப்பில் 142 பேர்