விமுப்புரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மே தின சிறப்பு பொதுக்கூட்டத்தில் பாமக இளைஞர் அணி தலைவர் மருத்துவர் அன்பு மணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, " எனக்குள் ஒரு மிகப்பெரிய வருத்தம் இன்றளவும் உள்ளது.
1949-1967 காலகட்டத்தில் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக 18 வருடத்தில் ஆட்சி அமைத்தது. அதிமுக 1972-1977 கால கட்டத்தில் 5 ஆண்டுகளில் ஆட்சி அமைத்தது. ஆனால் பாமக தொடங்கி 32 ஆண்டுகள் கடந்தும் ஆட்சி கட்டிலில் அமர முடியவில்லை. 55 ஆண்டுகள் அதாவது அரை நூற்றாண்டாக ஆட்சி அமைக்கும் திராவிட கட்சிகள் ஏன் நம்மால் ஆட்சி அமைக்க முடியாதா என்று கேள்வி எழுப்பினார்.
இளைஞர்களின் ஆதிக்கம் நிறைந்த கட்சி பாமக. நம்மிடம் எதிர்கால ஆண்டுகளுக்கான நவீன தொலை நோக்கு திட்டங்கள் உள்ளன. ஆனால் அதனை செயல்படுத்தும் அதிகாரம் நம்மிடம் இல்லை.
பதவி ஆசை கிடையாது : எனக்கு பதவி ஆசை ஒரு பொழுதும் இல்லை 35 வயதில் மத்திய அமைச்சராக என்னை டெல்லிக்கு அனுப்பி அழகு பார்த்தவர்கள் நீங்கள்.
நான் பார்க்காத உலகத்தலைவர்களே இல்லை. தமிழ்நாடு முன்னேற வேண்டும் என்பதே என் நோக்கம்" என்றார்.
சிசிடிவி கேமரா : பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், முதலமைச்சரும் ஆளுநரும் அரசியல் சாசன பிரதிநிதிகள் என்பதால் இருவரும் ரயில் தண்டவாளம் போல் இணைந்து செயல்பட்டால் தான் தமிழகம் முன்னேற்றம் அடையும் என்றும் தெரிவித்தார். விசாரணைக் கைதிகள் மரணம் அடைவதை தடுக்க காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.
ஆளுநர் மூலமாக தான் மசோதாக்கள் இயற்றப்பட்டு சட்டங்கள் உருவாக்கப்படும். எனவே ஆளுனர் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க : 'சஞ்சீவி மலையை சுமந்த அனுமனைப்போல, மோடி இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமக்கத் தயார்' - அண்ணாமலை பேச்சு