சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில்தான், கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக மேடைகள் பெட்டி அரங்க மரபிற்கேற்ப உருபெற்றன. தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்படும் இவர் சுமார் 40 நாடகங்களை எழுதியுள்ளார்.
தமிழ் நாடக மேடைகளுக்கு தன் உழைப்பின் மூலம் பெரும் பங்காற்றிய சங்கரதாஸ் சுவாமிகள், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தனது கலைச் சேவையை செய்தார்.
கடந்த நவம்பர் 13ஆம் தேதி இவரது நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேருந்து நிலையத்தில் இன்று (டிச. 15) நாடக தந்தை நினைவுநாள் விழா நடைபெற்றது.
தேசிய தலைவர் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, கடலுார், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து கிராமிய கலைஞர்கள் திரளாக வந்து விழாவில் பங்கேற்றனர்.
கலைஞர்கள் தங்கள் கலைகளை நிகழ்ச்சிகளாக நடத்தியபடி கிராம முக்கிய வீதிகள் வழியாகப் பேரணி சென்று மீண்டும் பேருந்து நிலையத்தை அடைந்தனர். இந்தப் பேரணியில் பாரம்பரிய கலைகளைப் போற்றி பாதுகாக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு மேற்கொள்ளபட்டது.
இதையும் படிங்க: சங்கரதாஸ் சுவாமிகளின் 98ஆவது நினைவு தினம் - நாடக கலைஞர்கள் அஞ்சலி