ETV Bharat / state

அஜித் படத்துக்கு சென்றவர்களுக்கு விதை பந்துகள் வழங்கல்!

author img

By

Published : Aug 9, 2019, 8:15 AM IST

விழுப்புரம்: திருக்கோவிலூரில் அஜித் படத்துக்கு சென்ற அனைவருக்கும், இளைஞர்கள் சார்பில் இலவச விதைப்பந்துகள் வழங்கப்பட்டன.

audiences

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நேர்கொண்ட பார்வை'. வினோத் இயக்கியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள மூன்று திரையரங்குகளில் 'நேர் கொண்ட பார்வை' படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் வெளியான முதல் நாளான நேற்று திரைப்படத்தை பார்க்க வந்த அனைத்து ரசிகர்களுக்கும் 'விதைவிருட்சம் அறக்கட்டளை' மற்றும் 'வானவில் விதைப்பந்து தயாரிக்கும் இளைஞர்கள் குழு' இணைந்து 10 ஆயிரம் விதை பந்துகளை இலவசமாக வழங்கினர்.

விதை பந்துகள் வழங்கல்!

முதல் காட்சி முடிந்து வெளியே வந்த அனைத்து ரசிகர்களுக்கும் இளைஞர்கள் குழு தனித்தனியாக நின்று விதைப்பந்துகளை வழங்கினார்கள். இதேபோல் ஒவ்வொரு முறையும் வழங்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். பேனர்கள் வைக்கும் வழக்கத்தை விடுத்து இளைஞர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Intro:விழுப்புரம்: திருக்கோவிலூரில் அஜித் படத்திற்கு வந்த அனைவருக்கும், இளைஞர்கள் சார்பில் இலவச விதைப்பந்துகள் வழங்கப்பட்டது.

Body:போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நேர்கொண்ட பார்வை'. H vinoth இயக்கியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள மூன்று திரையரங்குகளில் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் படம் வெளியான முதல் நாளான நேற்று திரைப்படத்தை பாரக்க வந்த அனைத்து ரசிகர்களுக்கும் 'விதைவிருட்சம் அறக்கட்டளை' மற்றும் 'வானவில் விதைப்பந்து தயாரிக்கும் இளைஞர்கள் குழு' இணைந்து 10,000 விதை பந்துகளை இலவசமாக வழங்கினார்கள்.

முதல் காட்சி முடிந்து வெளியே வந்த அனைத்து ரசிகர்களுக்கும் இளைஞர்கள் குழு தனித்தனியாக நின்று விதைப்பந்துகளை வழங்கினார்கள்.

இதேபோல் ஒவ்வொரு முறையும் வழங்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தார்கள்.

பேனர்கள் வைக்கும் வழக்கத்தை விடுத்து இளைஞர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Conclusion:மேலும் இளைஞர்களின் இந்த முயற்சி அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் படத்துக்கு, இதே திரையரங்கில் பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டு சரிந்து விழுந்தது 5 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.