சென்னையில் சமீபத்தில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் சரிந்து விழுந்து மாணவி சுபஸ்ரீ என்பவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைமையும் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் எனத் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.
இதனிடையே இன்று விழுப்புரம் அருகேயுள்ள காணை பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.
இந்நிலையில் இந்த நிகழ்வுக்கு வரும் அமைச்சரை வரவேற்கும் விதமாக காணை பகுதியில் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு இரும்புக் கம்பிகளில் கட்டப்பட்ட அதிமுக கொடிகள் சாலையின் இருபுறங்களிலும் பறக்கவிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே விளம்பர பேனர்களால் தமிழ்நாட்டில் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஆளுங்கட்சியினருக்கு இந்த விளம்பரம் தேவையா? என பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
அமைச்சர்கள் முதலில் பொதுத்தேர்வு எழுதி பாஸ் ஆகட்டும் -சீமான் ஆவேசம்