விழுப்புரம்: குப்புசாமி தெருவைச் சேர்ந்தவர் மரிய பிரபாகர் (30). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் இருசக்கர வாகன கடன் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவர் இன்று பிற்பகல் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே மைதானம் பகுதியில் தன்னுடைய இரு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
இந்நிலையில் அங்கு மரிய பிரபாகர் ரத்த வெள்ளத்தில் கழுத்து அறுக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். உடலை கைப்பற்றிய விழுப்புரம் நகர காவல் துறையினர் விசாரணை செய்ததில் நண்பர்கள் இருவருடன் கூட்டாக சேர்ந்து மது அருந்தியது தெரியவந்தது.
மேலும், அவர்களுக்குள் முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலால் மற்ற இருவரும் சேர்ந்து மரிய பிராபகரின் கழுத்து அறுத்து கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருந்த போதிலும் எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்றத்தலைவர் வெட்டிப்படுகொலை