ETV Bharat / state

20 ஆண்டுகளாக பாழடைந்து கிடந்த கழிவறை... சுத்தம் செய்த தன்னார்வ அமைப்பு! - விழுப்புரம் செய்திகள்

திண்டிவனம் அருகே 20 ஆண்டுகளாக பயனற்று கிடந்த கழிவறையை தன்னார்வ அமைப்பின் மூலம் கிராம இளைஞர்கள், பொதுமக்கள் சீரமைத்த நிகழ்வானது சமூக ஆர்வலர்களால் பாராட்டுகளை பெற்று வருகிறது.

20 ஆண்டுகளாக பாழடைந்து கிடந்த கழிவறை.. சுத்தம் செய்து காட்டிய தன்னார்வ அமைப்பு

author img

By

Published : Jan 8, 2023, 10:28 PM IST

20 ஆண்டுகளாக பாழடைந்து கிடந்த கழிவறை.. சுத்தம் செய்து காட்டிய தன்னார்வ அமைப்பு

விழுப்புரம்: திண்டிவனம் அருகே உள்ள கொங்கரப்பட்டு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மக்கள் பயன்பாட்டிற்காக கழிவறை ஒன்று கட்டப்பட்டது.

ஆனால் அந்த கழிவறை ஒரு வருடம் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. அதன் பிறகு முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் கடந்த 15 ஆண்டுகளாக உபயோகமின்றி இருந்து வந்துள்ளது.

மீண்டும் சீரமைக்க வேண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராம பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இது தொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக எந்த ஒரு மேல் நடவடிக்கையும் அரசாங்கம் சார்பாக எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து கழிவறை சுத்தம் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் குருவிகள் கூடு கூட்டமைப்பு என்கிற தன்னார்வ அமைப்பின் மூலம் தங்களது சொந்த நிதியில் சுத்தம் செய்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் கிடப்பில் இருந்த கழிவறையானது தற்போது மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தன்னார்வ அமைப்பின் மூலம் கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயனற்று கிடந்த தங்கள் கழிவறையை சீரமைத்த நிகழ்வானது சமூக ஆர்வலர்களால் பாராட்டுகளை பெற்று வருகிறது.

மேலும் இது போன்று அனைத்து கிராமங்களிலும் உள்ள இளைஞர்கள் தங்களது கிராமங்களில் உள்ள குறைகளை அரசானது தங்களுக்கு உதவும் என்கிற முனைப்பினை நகர்த்தி விட்டு தாங்களே களத்தில் இறங்கி தங்கள் ஊர் தங்கள் வீடு என்கிற மனப்பான்மையுடன் சுத்தம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:டி.ஆர். பாலு வாங்கிய காருக்கு பணம் தரவில்லை, பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.