ETV Bharat / state

திருமணம் மீறிய உறவை துண்டித்த பெண்: காதலன் செய்த விபரீத செயல் - நடந்தது என்ன? - etv bharat tamil

Illegal affailr leads death in villupuram: விழுப்புரத்தில் திருமணம் மீறிய உறவை துண்டித்த காரணத்தால் பெண்ணை உயிருடன் கொழுத்திய நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Viluppuram
விழுப்புரம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 1:56 PM IST

விழுப்புரம்: பிரம்மதேசம் அருகே நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரின் மனைவி விசாலாட்சி. இந்நிலையில் விசாலாட்சி என்பவருக்கும் இவர்கள் குடியிருப்புக்கு அருகே உள்ள மேட்டுத்தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் முருகன் என்பவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக திருமணம் மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவர்களின் இத்தகைய தவறான உறவு முறையானது ஊர் மக்கள் மற்றும் உறவினர்களிடையே தெரிய வந்து போது பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, விசாலாட்சி, முருகனுடனான உறவை திடீரென முறித்துக் கொண்டுள்ளார். இதை, ஏற்றுக்கொள்ள முடியாத முருகன் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி இரவு, விசாலாட்சியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது நகர் கிராமம் ஆலமரம் அருகே குப்பை கொட்டும் இடத்திற்கு வரும்படி கூறி மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த விசாலாட்சி, வேறு வழியில்லாமல் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை முற்றி கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "வறட்சியால் கருகிய பனை மரங்களை மீட்க நடவடிக்கை" - எம்பி கனிமொழி உறுதி!

இதில் ஆத்திரமடைந்த முருகன், விசாலாட்சி கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து அவர் மீது ஊற்றி தீ வைத்து கொழுத்திவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். வலி் தாங்கமுடியாத விசாலாட்சி அலறி துடித்தபடி ஊருக்குள் ஓடி வந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவர் மீது பற்றி எரிந்த தீயை உடனடியாக அணைத்து, அவரை சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், விசாலாட்சி சிகிச்சை பலனின்றி நேற்று (ஆகஸ்ட் 24ஆம் தேதி) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தான் உயிரிழப்பதற்கு முன்னதாக தன்னுடைய உயிரிழப்புக்கு காரணம் முருகன் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டு இறந்துள்ளார். தற்போது அவர் கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த சம்பவத்தை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: INDIA கூட்டணியினரை குண்டு கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.