ETV Bharat / state

"கருணையுற்றால் நீ பலருக்கு அன்னை": அநாதைப் பிணங்களை அடக்கம் செய்து உதவும் தம்பதி!

தன்னலம் இன்றி, பிறர் நலன் கருதி ஆதரவற்ற மக்களுக்கு சுமார் 17 ஆண்டுகளாக உதவிக்கரம் நீட்டி வரும் ’அன்பு ஜோதி ஆசிரம’ தம்பதி குறித்த சிறப்பு தொகுப்பை காணலாம்.

தன்னலம் இன்றி ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்டி வரும் தம்பதி

author img

By

Published : Nov 7, 2022, 10:13 PM IST

விழுப்புரம்: "கருவுற்றால் நீ ஒரு குழந்தைக்கு அன்னை, கருணையுற்றால் நீ பலருக்கு அன்னை" எனும் அன்னை தெரசாவின் பொன்மொழிக்கேற்ப, 17 ஆண்டுகளாக 300க்கும் மேற்பட்ட ஆதரவற்ற அநாதை பிணங்களை அடக்கம் செய்து, ஆதரவற்றோருக்கு உதவிகள் செய்து வருகின்றனர், விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகிகள்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சாலையில் அமைந்துள்ள குண்டலபுலியூர் கிராமத்தைச்சேர்ந்தவர்கள் ஜூவின் மற்றும் மரியா தம்பதியினர். இவர்கள் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 17 ஆண்டுகளாக 300-க்கும் மேற்பட்ட அநாதை பிணங்களை சேவை மனப்பான்மையுடன் உரிய முறையில் சடங்குகள் செய்து, நல்லடக்கம் செய்து வருகின்றனர்.

விழிப்புணர்வு பயணங்கள்: மேலும் இவர்கள், ’அன்பு ஜோதி’ என்ற பெயரில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இங்கு அனைத்து நன்கொடைகளும் காணிக்கைகளும் உணவு, உடைகள் மற்றும் மருந்துகளுக்கு மட்டுமே செலவிடப்படுகின்றன.

அநாதைகள், உரிமை கோரப்படாதவர்கள், ஆதரவற்ற மன/உடல் குன்றியோர், துன்பத்தில் உள்ளவர்கள், நோயுற்றோர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் வயதானவர்கள் ஆகியோரைப் பராமரித்து மறுவாழ்வு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

தன்னலம் இன்றி ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்டி வரும் தம்பதி
தன்னலம் இன்றி ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்டி வரும் தம்பதி

அவர்களில் சிகிச்சை தேவைப்படுவோருக்கு உரிய சிகிச்சை, குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வியை ஏற்பாடு செய்தல், ஆதரவற்ற விதவைகள் மற்றும் வயதானவர்களை அவர்களின் பாதுகாவலர்களிடம் ஒப்படைப்பது, போன்ற காரியங்களை செய்து வருகின்றனர்.

மேலும், ஆடியோ காட்சி மூலம் பல்வேறு சமூக தீமைகள் மற்றும் எய்ட்ஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் எங்கு விபத்து ஏற்பட்டாலும், உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து நோயாளிகளை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்து, பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கின்றனர்.

அநாதைகள் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்களைத் துன்புறுத்தவோ, வெறுக்கவோ கூடாது என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஏழை சமுதாயத்தைச் சேர்ந்த நோயாளிகளுக்கும், தன்னார்வலர்கள் மூலம் ரத்த தானம் ஏற்பாடு செய்தல்;

அது மட்டுமின்றி, தமிழ்நாடு மற்றும் புதுவை முழுவதும் உள்ள பல பொது இடங்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைகளில் உரிய முறையில் சிகிச்சை அளித்து தங்களது ஆசிரமத்தில் பராமரித்தும் வருகின்றனர். மேலும் அவர்களின், தகுதிக்கு ஏற்ற வகையில் வேலைவாய்ப்பையும் அளித்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து வருகின்றனர்.

’மீண்டு’ம் பயணம்: மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், அதிலிருந்து மீண்டு, சுயநினைவு திரும்பியவுடன் அவர்கள் விருப்பப்படி அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியையும் செய்து வருகின்றனர். இதுபோன்று கடந்த 17 ஆண்டுகளாக 5,000க்கும் மேற்பட்ட நபர்களை அவரவர் உறவினர்கள் உடன் சேர்த்து வைத்துள்ளனர்.

யாரும் இல்லாத ஆதரவற்ற நபர்களை தங்களது ஆசிரமத்தில் உணவு, உறைவிடம் வழங்கி இதுபோன்ற பராமரிப்புப்பணியை, சேவை மனப்பான்மையுடன் இத்தம்பதியினர் செய்து வருகின்றனர். இவர்களின் இந்த பணியை விழுப்புரம் மாவட்ட மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

அரசின் உதவியை எதிர்நோக்கி: அநாதை பிணங்களை அடக்கம் செய்வதற்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தால் அரசு இவர்களுக்கு அநாதை பிணங்களை அடக்கம் செய்ய இடவசதி செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜுவின்,மரியா தம்பதியினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: டீ கப் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பழங்குடியின பெண்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.