விழுப்புரம்: செஞ்சி அருகே பரந்தன்தாங்கள் பகுதியைச்சேர்ந்த மின்வாரிய ஊழியர், ஏழுமலை. அவரின் மகேந்திரா சைலோ கார் ஆனது திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியது. தீ விபத்து குறித்து செஞ்சி தீயணைப்பு போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நேற்று மாலை வெளியே சென்றுவிட்டு வந்து தனது வீட்டிற்கு முன் காரை நிறுத்தியுள்ளார், ஏழுமலை. இந்நிலையில் தீபாவளி பண்டிகையான இன்று(அக்.24) காருக்கு அருகே சிலர் பட்டாசுகள் வெடித்ததாகத் தெரியவருகிறது. இதனிடையே அதனால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது தீ விபத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்கிற கோணத்தில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:வெறிச்சோடிய சென்னை... 12 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்...