ETV Bharat / state

கழிவுநீர் தொட்டியில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு! - Child recoved by drainge water tank

விழுப்புரம்: முழுமையாக மூடப்படாத கழிவு நீர் தொட்டியில் எட்டு வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

child death
child death
author img

By

Published : Dec 22, 2020, 9:57 AM IST

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவநாதசுவாமி ஆசிரியர் ஜான்பால். இவரது மகன் ரெமி கிளாட்வின் (8). நேற்று (டிச. 21) மாலை 3 மணியவில் சிறுவர்களுடன் சைக்கிள் ஓட்டி விளையாடி வந்தார். திடீரென சிறுவன் காணாமல் போனதால், அவனை பெற்றோர் பல இடங்களில் தேடினர்.

கழிவு நீர் தொட்டியில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

கழிவுநீர் தொட்டிக்குள் கிடந்த சிறுவன்

பக்கத்து தெருவில் புதியதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டின் அருகே சிறுவனின் சைக்கிள் கிடந்ததாகத் தகவல் வந்ததையடுத்து, அப்பகுதி முழுவதும் தேடினர். அப்போது வீட்டின் கழிவு நீர் தொட்டியில் சிறுவன் கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 10 அடி ஆழம் உள்ள தொட்டியில் இறந்த நிலையில் கிடந்த சிறுவனின் உடலை மீட்டனர்.

பராமரிப்பு இல்லாமல் கிடந்த கழிவுநீர் தொட்டி

முழுமையாக கழிவு நீர் தொட்டி மூடப்படாமல் சிறு பலகையை வைத்து மூடப்பட்டிருந்ததால் அவற்றில் சைக்கிளை ஓட்டியபோது பலகை உடைந்து உள்ளே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, வளவனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: மோடியின் திட்டத்தால் விவசாயிகள் தற்கொலை தடுக்கப்பட்டுள்ளது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.