விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆமைகள் வந்து முட்டை இடுவது வழக்கம்.
ஆழ்கடல் பகுதியில் இருக்கும் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காகக் கரைப்குதிக்கு வருகின்றன. கடற்கரைப் பகுதியில் இருக்கும் மணல்மேட்டில் பள்ளம் தோண்டி அதில் முட்டைகள் இட்டு, மீண்டும் ஆமைகள் கடலுக்குள் சென்றுவிடுகின்றன.
இந்த முட்டைகள் ஆமைகள் பாதுகாப்பு மையத்தில் வைத்து இனப்பெருக்கத்திற்காகப் பாதுகாக்கப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று (மார்ச் 31) காலை ஆமைகள் பாதுகாப்பு மையத்தில் 150 ஆமைக் குஞ்சுகள் பொரித்தன. இந்த ஆமைக் குஞ்சுகளைக் கடலில் ஆமைகள் பாதுகாப்பு மையத்தின் அலுவலர்கள் விட்டனர்.
இதையும் படிங்க: ஆமை குஞ்சுகளுக்கு 'பாய்' சொன்ன கடலூர் ஆட்சியர்