கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும்வகையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டு, பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்காகவும் மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அரசு உத்தரவை மீறி சாலையில் செல்பவர்களைக் காவல் துறையினர் எச்சரித்து அனுப்பிவருகின்றனர்.
இதனிடையே, அரசின் முடிவை பொருட்படுத்தாமல் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வீரகாளியம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த, ஐந்து இளைஞர்களைக் காவலர்கள் பிடித்தனர்.
அப்போது அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையாகத் தோப்புக்கரணம் போடவைத்தனர். பின்னர் வெளியில் சுற்றாமல் வீட்டில் இருக்க வேண்டும் என அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
இதையும் படிங்க: கிருமி நாசினி உபகரணங்கள் வழங்கிய விஜய் ரசிகர்கள்!