தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இதற்காகக் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1294 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 724 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன்படி, மாவட்டம் முழுவதும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமை மாவட்ட ஆட்சியர் கிரன்குரலா, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர், துணை ஆட்சியர் சாய்வர்தினி, சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் தாய்மார்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் குழந்தைகளுக்கு போலியோ மருந்து போட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: