தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே கரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் குறைந்திருந்த கரோனா பாதிப்பு, மீண்டும் தற்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இதனைத்தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் பயிற்சி காவலர், போக்குவரத்து காவலர், பொதுமக்கள் உள்ளிட்ட 109 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,186ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிப்பால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 632 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க:ராமநாதபுரத்தில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர் சேவை மையம்