சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் நடைபெற்று வருகின்றது. இதன் ஒருபகுதியாக விழுப்புரம் போக்குவரத்து கழகம் பக்தர்களின் நலன் கருதி சிறப்புப் பேருந்துகளை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விழுப்புரம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் முத்துகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'பொதுமக்களின் வசதிக்காக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
குறிப்பாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், செஞ்சி, திண்டிவனம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல இடங்களில் இருந்தும் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படவுள்ள இந்த சிறப்பு பேருந்துகளை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகுவதாக நோட்டீஸ் ஒட்டிய ஜோதிபாசு!