கே.வி.குப்பம் அடுத்த கீழ் விலாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் மத்திய எல்லை பாதுகாப்புப் படை பிரிவில் பணிப்புரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (29). இவர்களுக்கு நந்திதா என்கிற நான்கு வயது பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், தாய் ஜெயந்தி, 4 வயது பெண் குழந்தை இருவரும் இன்று (மார்ச்1) அதிகாலை விரிஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவலறிந்து வந்த காட்பாடி ரயில்வே காவல் துறையினர் இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காதல் விவகாரம்: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை!