ETV Bharat / state

பால் ஊற்றுவதில் தகராறு... தொழிலாளி வெட்டிக் கொலை

author img

By

Published : Jan 11, 2023, 8:59 PM IST

தொழில் போட்டி காரணமாக லத்தேரி அருகே பால் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டதையடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பால் ஊற்றுவதில் தகராறு... தொழிலாளி வெட்டிக் கொலை
பால் ஊற்றுவதில் தகராறு... தொழிலாளி வெட்டிக் கொலை

பால் ஊற்றுவதில் தகராறு... தொழிலாளி வெட்டிக் கொலை

வேலூர்: கே.குப்பம் தாலுகா, லத்தேரி அடுத்த வடுங்கன்தாங்கல், பி.என்.பாளையத்தைச் சேர்ந்த பால் வியாபாரிகள் நாகேஷ்(41), கிருஷ்ண மூர்த்தி(40). இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக ஏற்பட்ட தகராறில் நாகேஷ் (41) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை செய்த கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்து, லத்தேரி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கிருஷ்ணமூர்த்தி 15 வருடங்களாக பால் விபாயாரம் செய்து வரும் நிலையில் மாட்டின் உரிமையாளர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பாலை ரூ.23 என பெற்றுள்ளார். நாகேஷ் (41), 5 வருடங்களாக பால் வியாபாரம் செய்து வரும் நிலையில் ஒரு லிட்டர் பாலை ரூ.26 என பெற்று வந்துள்ளார்.

இதனால் இதுவரை கிருஷ்ணமூர்த்தியிடம் பால் ஊற்றி வந்தவர்கள், தற்போது நாகேஷிடம் பால் ஊற்றியதால் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து லத்தேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து வேறு காரணங்கள் இருக்குமோ என சந்தேகத்தின் அடிப்படையில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் பழனி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:"மாமூல் கேட்டா தரணும்" வியாசர்பாடியில் அட்டகாசம் செய்த ரவுடி கும்பல் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.