ETV Bharat / state

போன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கும் ஓட்டுநர்.. வைரலாகும் வீடியோ! - வேலூர்

Viral Video of Bus Driver: வேலூர் அருகே தனியார் பேருந்து ஓட்டுநர் ஆபத்தான முறையில் செல்போன் பேசியபடி ஒற்றைக் கையால் பேருந்தை இயக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆபத்தான முறையில் பேருந்தை இயக்கும் தனியார் பேருந்து ஓட்டுநர்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 4:58 PM IST

ஆபத்தான முறையில் பேருந்தை இயக்கும் தனியார் பேருந்து ஓட்டுநர்

வேலூர்: வேலூர் - ஒடுக்கத்தூர் இடையே, அணைக்கட்டு வழித்தடத்தில் பல தனியார் பேருந்துகள் இயங்கி வரும் நிலையில், நேற்று (நவ.8) மதியம் ஒடுக்கத்தூரில் இருந்து வேலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் ஓட்டுநர், நீண்ட தூரம் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆபத்தை உணராத பேருந்து ஓட்டுநர், சாகசம் செய்வதைப் போல ஒரு கையில் செல்போனில் பேசிக் கொண்டு, இன்னொரு கையால் ஸ்டேரிங் மூலம் ஓட்டுவது, கியர் மாற்றுவது, ஹாரன் அடிப்பதுமாகவும், சில நேரம் ஸ்டேரிங்கில் இருந்து இரண்டு கைகளையும் விட்டுவிட்டு பேருந்தை இயக்கியுள்ளார்.

தனியார் பேருந்து ஓட்டுநரின் இச்செயல், அந்தப் பேருந்தில் பயணித்த பயணிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதோடு, அது குறித்து பயணிகள் ஓட்டுநரிடம் கேட்டபோது, முறையாக பதில் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும், இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக புகார் அளிக்கும் பொதுமக்கள், இது குறித்து தனியார் பேருந்து நிறுவனங்களும், அரசு போக்குவரத்துத் துறையும் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இதைப் போன்ற விதிமுறையை மீறும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: Brahma Kamalam : வீட்டில் பூத்த பிரம்ம கமலம் பூ..! பூஜை செய்து வழிபட்ட குடும்பத்தினர்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.