தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் வழங்குதல் போன்றவற்றைத் தடுக்க வேலூர் மாவட்டத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் வேலூர் கொணவட்டம் பகுதியில் தேர்தல் நிலைக் கண்காணிப்புக்குழு அலுவலர் ராஜலட்சுமி தலைமையிலான குழுவினர் நேற்று (மார்ச் 3) வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
குக்கர், தோவை தவா
அப்போது பள்ளிகொண்டாவுக்குச் சென்றுகொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் 26 ஆயிரம் ரூபாய், எட்டு குக்கர், எட்டு தோசை தவாக்கல், எட்டு ஜூஸ் மிக்சர்கள் இருப்பது தெரியவந்தது.
மேலும் அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றைப் பறிமுதல்செய்து வேலூர் வட்டாட்சியர் ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டன.