நேற்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட மாதர் சங்கத்தினர் சொந்த வீடு இல்லாத 25,000 ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய மாதர் சங்க நிர்வாகி, 'வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மாதர் சங்கத்தினரிடம் மனு வாங்கக் கூட லாயக்கற்றவர், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டுச் சென்றால், அனுமதி வழங்கவா வேண்டாமா என்று தயங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறார். எனவே அவரை இடமாற்றம் செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தினார். இந்த ஆர்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க... உணவு மாற்றத்தால் 49 விழுக்காடு பெண்களுக்கு மார்பக புற்றுநோய்!