வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்றிரவு முதல் மிதமான மழை பெய்துவருகிறது. இன்று காலையும் மழை நீடித்து வந்ததால் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் மழை காரணமாக வேலூர் காட்பாடியில் உள்ள திருவள்ளுவர் அரசு பல்கலைகழகத்தில் கீழ் இயங்கும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் தாமரை செல்வி அறிவித்துள்ளார்.
மேலும் ரத்து செய்யப்பட்ட தேர்வு அடுத்த மாதம் 3ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 97 வட்டார கல்வி அலுவலர் பணிக்கு, பி.எட்., பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!