ETV Bharat / state

தள்ளாடும் வயதிலும் உழைப்பை நம்பி வாழும் தம்பதி.! - Pot Making

ஓய்வு என்பது வயது சார்ந்தது அல்ல மனதை சார்ந்தது, மனதில் உறுதியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம், 100 வயதிலும் உழைத்து வாழலாம். இந்த வரிகளுக்கு உரியவர்களாக திகழ்கிறார்கள் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னுரங்கம் - வள்ளியம்மாள் தம்பதி.

வேலூர் மண்பாண்டம் செய்யும் தம்பதி தள்ளாடும் வயதிலும் உழைப்பை நம்பி வாழும் தம்பதி Pot Making Old age Couples Vellore Pot Making Old age Couples Pot Making தள்ளாடும் வயதிலும் உழைப்பை நம்பி வாழும் தம்பதி.!
Pot Making Old age Couples
author img

By

Published : Feb 24, 2020, 9:09 PM IST

வேலூர் மாவட்டம் சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம் (90). இவரது மனைவி வள்ளியம்மாள் (78). இந்தப் பகுதி முழுவதும் மண்பாண்டம் தொழில் செய்யும் தொழில் நிறைந்த பகுதி ஆகும். இங்குள்ளவர்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட பாரம்பரியமிக்க பகுதியில் பிறந்த பொன்னுரங்கம் தந்தையிடமிருந்து மண்பாண்டம் தொழிலைக் கற்றுக் கொண்டார்.

அன்றிலிருந்து இந்த தொழிலை நேசிக்க ஆரம்பித்த பொன்னுரங்கம், வாழ்க்கையில் தான் சந்திக்க இருக்கும் சவால்கள் எண்ணிப் பார்க்காமல் சக மனிதர்களை போல் தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார். தனக்கு துணையாக வள்ளியம்மாளை மணமுடித்த பொன்னுரங்கம் தனது தொழிலுக்கும் தன் மனைவியை துணையாக வைத்துக் கொண்டார். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இந்த தொழிலில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த தம்பதிக்கு ரூபாவதி (57), வாசுகி (51), பாண்டு (53), ஹேமாவதி (48), ஞானசேகரன் (45), துர்காதேவி (41) என 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். நாளடைவில் மண்பாண்டம் தொழில் நலிவடைந்த போதிலும் கடும் வறுமையிலும் தனது ஆறு குழந்தைகளை தம்பதியினர் வளர்த்து ஆளாக்கியுள்ளனர். ஒரு பக்கம் வறுமை வாட்டிய நிலையில் மறுபக்கம் தனது இரண்டாவது மகள் வாசுகி கண் பார்வையை இழந்து நின்றதைப் பார்த்து தம்பதி கண்கலங்கினர்.

மகளுக்கு எப்படியாவது பார்வை கிடைக்க வேண்டும் என்பதற்காக இருவரும் ஒவ்வொரு மருத்துவமனையாக அலைந்து பார்த்தும் எந்த பலனும் ஏற்படவில்லை. ஒரு கட்டத்தில் பார்வை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை வாழ்நாள் முழுவதும் உனக்கு நாங்களே துணையாக இருக்கிறோம் என்று கூறி தனது பார்வையற்ற மகளை பொன்னுரங்கம் - வள்ளியம்மாள் தம்பதி அரவணைத்து வளர்க்கத் தொடங்கினர்.

வேலூர் மண்பாண்டம் செய்யும் தம்பதி தள்ளாடும் வயதிலும் உழைப்பை நம்பி வாழும் தம்பதி Pot Making Old age Couples Vellore Pot Making Old age Couples Pot Making தள்ளாடும் வயதிலும் உழைப்பை நம்பி வாழும் தம்பதி.! Suggested Mapping : state
பார்வையற்ற மகள் வாசுகியுடன் பொன்னுரங்கம் வள்ளியம்மாள்

தற்போது வாசுகிக்கு 51 வயது ஆகிறது பார்வை இல்லை என்ற ஒரே காரணத்தால் அவருக்கு திருமணமும் நடைபெறவில்லை. இதனால், அவருக்கு அனைத்துமாய் அவரது பெற்றோர்கள் இருந்து வருகின்றனர். மனம் தளராமல் தனது மகளை பொன்னுரங்கம் இன்றுவரை கூடவே வைத்து கவனித்துக் கொள்கிறார்.

வள்ளியம்மாளும் சமையல் வேலை, வீட்டு வேலை மற்றும் கணவனுக்கு துணையாக மண்பாண்ட வேலை என அன்றாட பணிகளுக்கு இடையில் தனது பார்வையற்ற மகளை கண்ணிமை போல் பாதுகாத்து வருகிறார். மேலும் இவரது இரண்டு மகன்களும் வளர்ந்து ஆளாகி வேலைக்கு சென்றாலும் கூட பொன்னுரங்கம் இன்னும் தனது மண்பாண்டம் தொழிலை கைவிடவில்லை முடிந்தவரை சுயமாக சொந்தக்காலில் நின்று சம்பாதித்து, தான் வாழ்வது மட்டுமல்லாமல் தனது பார்வையற்ற மகளையும் வாழ வைக்க வேண்டும் என்பதற்காக இருவரும் தற்போது வரை மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் பொன்னுரங்கம் பெரிய அளவிலான மண்பானைகளை உற்பத்தி செய்து வந்துள்ளார்.

தற்போது பொன்னுரங்கம் உடல் ஒத்துழைக்கும் போது மட்டுமே மண்பானைகளை செய்துவருகிறார். மற்ற நாள்களில் மண் அடுப்புகள், மண் பாத்திரங்கள் ஆகியவற்றை செய்து வருகிறார். பொன்னுரங்கத்தின் நேர்த்தியான வேலையை கேள்விப்பட்டு அக்கம்பக்கத்தினர், வெளியூரைச் சேர்ந்தவர்கள் வாடிக்கையாக இவரிடம் மண்பாண்டம் சார்ந்த பொருள்களை வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து பொன்னுரங்கம் கூறுகையில், "எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் இந்த தொழிலை செய்து வருகிறேன் ஆரம்பத்தில் பெரிய பெரிய மண்பானைகளை செய்து வந்தேன். தற்போது உடல் ஒத்துழைக்கவில்லை இருந்தாலும் என்னால் முடிந்தவரை சின்ன சின்ன மண் பானைகளை செய்து வருகிறேன். வேலை கஷ்டமாக தான் இருக்கிறது.

தள்ளாடும் வயதிலும் உழைப்பை நம்பி வாழும் தம்பதி

இருந்தாலும் அன்றாட செலவுக்கு பணம் தேவை என்பதால் வேலையை விட மனமில்லை. எனது பார்வையற்ற மகளை நாங்கள் தான் கவனித்து கொள்கிறோம். அரசு தரப்பில் எங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கிறது. அதை அதிகப்படுத்தி கொடுத்தால் பெரிதும் உதவியாக இருக்கும். மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட பிறகு ஏரியில் மணல் கிடைக்கிறது.

ஆனால், ஒரு லோடு 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்கபடுகிறது”என்றார். வள்ளியம்மாள் கூறுகையில், "எனக்கு திருமணமான சில ஆண்டுகளில் இருந்து இந்த தொழிலை கற்றுக்கொண்டேன். தற்போதுவரை அவருக்கு உதவியாக இருந்து வருகிறேன். எனது மகன்கள் வளர்ந்து ஆளாகி விட்டனர். இருந்தாலும் சுயமாக நாங்கள் உழைத்து வாழ்கிறோம்” என்று தெரிவித்தார்.

படித்துவிட்டு வேலை கிடைக்கவில்லை என்று சோர்ந்து போகும் இளைஞர்களுக்கு, மத்தியில் உடல் தளர்ந்தாலும் பரவாயில்லை.... மனம் தளரவில்லை என்ற எண்ணத்தில் சுயமாக நின்று உழைத்து வாழ்ந்து வரும் பொன்னுரங்கம் - வள்ளியம்மாள் தம்பதி, பெரும்பாலானவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

பொன்னுரங்கம் அரசிடமிருந்து பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்கவில்லை தனக்கு வரும் ஓய்வூதிய தொகையை உயர்த்தி கொடுத்தால் மட்டுமே போதும் என்கிறார்.

இதையும் படிங்க:குடிகார ஆட்டோ டிரைவராக இருந்து லிங்காயத் மடத்தின் தலைவராக மாறிய இஸ்லாமியர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.