வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துமனையில் உள்ள பெண்கள் கழிப்பறையில் கேட்பாரற்ற நிலையில் பெண் சிசு கிடந்துள்ளது. அதிகாலை சுத்தம் செய்ய கழிவறைக்குச் சென்ற மருத்துவமனை ஊழியர்கள் கழிவறைக்குள் தலைகுப்புற கவிழ்ந்த நிலையில் ஒரு சிசு இருப்பது தெரியவந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்
மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளே சென்று கழிவறைக்குள் கிடந்த சிசுவை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு மீட்டனர். இதன் பின்னர் அதை சோதித்து பார்த்தபோது அது பெண் சிசு என்பதும் 1.4 கிலோ எடை உள்ளது எனக் கண்டறியப்பட்டது. மருத்துவமனை மருத்துவர்கள் பெண் சிசுவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும், இறந்துபோன அந்தப் பெண் சிசு உள் நோயாளிகள் யாருடையதும் இல்லை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.