ETV Bharat / state

வேலூரில் தந்தை, மகள் படுகொலை: போலீசார் விசாரணை!

author img

By

Published : Oct 3, 2020, 5:22 PM IST

வேலூர்: அணைக்கட்டு அருகே தந்தை, மகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூரில் தந்தையும் மகளும் படுகொலை
வேலூரில் தந்தையும் மகளும் படுகொலை

வேலூர் மாவட்டம் ஜார்த்தான்கொல்லை கந்திபுதூர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பொன்னுசாமி, பாஞ்சாலை தம்பதி. இவர்களுக்கு ஏழு வயதில் தீபா என்ற சிறுமி உள்ளார்.

தம்பதி சென்ற 25 ஆண்டுகளாக வேப்பங்குப்பம் ரங்கன் கொட்டாய் பகுதியில் உள்ள அன்ஷர் பாஷா என்பவரக்கு சொந்தமான விவசாய நிலத்தில் காவல் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு (அக்‌.2) பொன்னுசாமி, அவரது மகள் தீபா ஆகியோர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

இன்று (அக்.3) காலை சின்னப்பமந்திரி என்பவர் இச்சம்பவம் குறித்து வேப்பங்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் சரக டிஐஜி காமினி, எஸ்பி செல்வகுமார், எஎஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆகியோர் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளிகளை பிடிக்க எஎஸ்பி தலைமையில் 16 காவலர்களை கொண்ட இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையில் பொன்னுசாமிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக தெரியவந்துள்ளது.

கொலையை நேரில் பார்த்த இறந்த பொன்னுசாமியின் மனைவி பாஞ்சாலை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவருக்கு கொலை குறித்து எதுவும் தெரியவில்லை.

இதையும் படிங்க: வீட்டில் தனியாக இருந்த முதியவர் கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.