ETV Bharat / state

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல்! - திமுக வேட்பாளர்

வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் இன்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

vellore
author img

By

Published : Jul 17, 2019, 5:34 PM IST

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வந்திருந்தார். அவருடன் திமுக பொருளாரும், அவரது தந்தையுமான துரைமுருகன், திமுக எம்பி ஜெகத்ரட்சகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் காதர் மொகைதீன், திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் வந்திருந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரத்திடம் தனது வேட்புமனுவை கதிர் ஆனந்த் தாக்கல் செய்தார்.

ஆட்சியரிடம் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல்!

பின்னர், செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறுகையில், "இன்றிலிருந்து எங்களது தேர்தல் பரப்புரையை தொடங்குகிறோம். மத்திய அரசு ஹைட்ரோகார்பன் போன்ற மக்கள் விரோத திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முயற்சிக்கிறார்கள். இனியும் அந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சித்தால் ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பை சந்திக்க வேண்டியிருக்கும். எதிர் போட்டியாளர் பற்றி எங்களுக்கு கவலையில்லை. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

Intro:ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் ஒட்டுமொத்த தமிழக மக்களின் வெறுப்பை சந்திக்க வேண்டியிருக்கும் - பாஜகவுக்கு துரைமுருகன் எச்சரிக்கைBody:வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார் அவருடன் திமுக தலைவர் துரைமுருகன் அரக்கோணம் தொகுதி திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் காதர் மொகைதீன் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் வந்தனர் இரண்டாவது மாடியில் உள்ள மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சண்முகசுந்தரத்திடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அதன் பிறகு வெளியே வந்த துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அறிக்கையில், "இன்றிலிருந்து எங்கள் பிரச்சாரத்தை துவங்குகிறோம் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் போன்ற மக்கள் விரோத திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முயற்சிக்கிறார்கள் எனவே இனியும் அந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சித்தால் ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பை சந்திக்க வேண்டியிருக்கும் எதிர் போட்டியாளர் பற்றி எங்களுக்கு கவலையில்லை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்றார். முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்யும்போது திமுகவினர் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதாவது விதிப்படி வேட்பாளருடன் 4 நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும் ஆனால் திமுகவினர் ஏராளமானோர் ஒட்டுமொத்தமாக உள்ளே நுழைந்ததால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர் அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொகைதீன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை உள்ளே விடாமல் காவல்துறையினர் தடுத்தனர் இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது கொந்தளித்த துரைமுருகன், என்ன நடக்கிறது இங்கே இது என்ன அர்த்தம் இருக்கிறது என்று கோபத்துடன் காவல்துறையினரை கேள்வி எழுப்பினார் பின்னர் சமரசத்திற்கு பிறகு முக்கிய நிர்வாகிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.