ETV Bharat / state

Vellore:செல்போன் காணவில்லையா?.. வந்தாச்சு போலீசாரின் 'செல் ட்ரேக்கர்' - செல் ட்ரேக்கர் அறிமுகம்

வேலூர் மாவட்டத்தில் செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ காவல்துறை வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவிக்கும் வகையில் வாட்ஸ் அப் எண்னை வெளியிட்டார் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தொலைந்து போன அல்லது திருடு போன செல்போன்கள் குறித்து புகார் அளிக்க செல் ட்ரேக்கர்

author img

By

Published : Jul 3, 2023, 11:14 PM IST

தொலைந்து போன அல்லது திருடு போன செல்போன்கள் குறித்து புகார் அளிக்க செல் ட்ரேக்கர்

வேலூர்: பொதுமக்களின் செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒரு வசதியை அறிமுகம் செய்துள்ளனர். மேலும் இதற்காக, பொதுமக்கள் இனி காவல் நிலையங்களுக்கு செல்லாமல், இருக்கும் இடத்திலிருந்தே இப்புகார்களை அளிக்கும் வகையிலும் தொழில்நுட்ப ரீதியாக வேலூர் காவல் துறையினர் ஒரு புதிய பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

செல்போன் காணவில்லையா?: செல்போன் களவுபோனால், காவல்துறையின் வாட்ஸ்அப்பில் புகார் தெரிவிக்கும் வகையில், ஒரு வாட்ஸ் அப் எண்ணை டி.ஐஜி அறிமுகம் இன்று (ஜூலை 3) செய்துள்ளார். கைப்பேசி களவுபோனால் காவல் நிலையத்துக்கு செல்லாமல் வீட்டிலிருந்தே புகார் அளிப்பதற்கு வசதியாக 'செல் ட்ரேக்கர்' என்ற புதிய கூகுள் படிவம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

வந்தாச்சு 'செல் ட்ரேக்கர்' என்ற புதிய கூகுள் படிவம்: வேலூர் சரக காவல் துணைத்தலைவர் (டிஐஜி) எம்.எஸ்.முத்துச்சாமி உத்தரவின்பேரில், வேலூர் மாவட்டத்தில் கைப்பேசிகள் களவுபோனால் பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு வசதியாக செல் ட்ரேக்கர் எனும் புதிய கூகுள் படிவத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அறிமுகம் செய்துள்ளார்.

இதையும் படிங்க: பாரத் 6ஜி தொழில்நுட்பம் அறிமுகம்... 2030க்குள் அதிவேக இணைய சேவை வழங்க திட்டம்!

மிஸ்டுகால் கொடுத்தால் போதும்: இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன், “கைப்பேசியை தவறவிட்டவர்கள் 94862 14166 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு ஹாய் என்று குறுந்தகவல் அனுப்பினால் மட்டும்போதும், உடனடியாக தங்கள் கைப்பேசிக்கு ஒரு லிங்க் அனுப்பி வைக்கப்படும். அந்த லிங்க்குள் சென்று அதிலுள்ள கூகுள் படிவத்தில் பெயர், முகவரி, களவுபோன கைப்பேசி எண், ஐஎம்ஈஐ (IMEI) எண் போன்ற விவரங்களை பதிவிட்டால் அந்த தகவல் மாவட்ட சைபர் காவல் பிரிவுக்கு அனுப்பப்பட்டு உடனடியாக காணாமல் போன கைப்பேசியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபடுவர்.

இனிமேல் புகார் அளிக்க அலையவேண்டியதில்லை: இதன்மூலம், பொதுமக்கள் காவல்நிலையத்துக்கு சென்று காணாமல்போன கைப்பேசி குறித்து புகார் அளிப்பது, சிஎஸ்ஆர் பெறுவதில் நிலவும் காலவிரையத்தை தவிர்க்க முடியும். இதனால், 100 சதவீதம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுவிடுவதால் காவல் நிலையங்களில் புகார் மனு பெறவில்லை என்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும் தவிர்க்கப்படும்.

மேலும், காவல் துறையின் நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்படும் வாய்ப்பும் குறைவு என்று தெரிவித்துள்ளார். வேலூரில் காவல் துறையின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடம் பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இது போன்ற வசதியை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டம் அதிர்ஷ்ட விளையாட்டா? - இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.