ETV Bharat / state

’புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்படும்’ - வேலூர் மாவட்ட ஆட்சியர் - vellore district collector

வேலூர்: புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிகள் ஓரிரு மாதத்தில் தொடங்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர்
author img

By

Published : Nov 9, 2019, 11:43 PM IST

வேலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் வேலூர் புதிய பேருந்து நிலையம் ரூ. 46 கோடியில் புதுப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வணிகர்கள், வாகன உரிமையாளர்கள், சங்க பிரதிநிதிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திமுக தரப்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன் மற்றும் ஈஸ்வரப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தின் முக்கியப் பிரச்னையாக இருக்கக்கூடிய கிரீன் சர்க்கிள் போக்குவரத்து நெருக்கடிப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் கிரீன் சர்க்கிள் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியரின் பேட்டி

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கிரீன் சர்க்கிள் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இப்பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு ஒரு சில சமயத்தில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் விபத்தைத் தடுக்கவும் ஒரு சில முடிவுகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிகள் ஓரிரு மாதங்களில் தொடங்கவிருக்கிறது. பணிகள் தொடங்குவதற்கு முன்பு தற்காலிக பேருந்து நிலையங்கள் எங்கு அமைக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய மக்கள் கோரிக்கை!

Intro:வேலூர் மாவட்டம்

வேலூர் புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி இரண்டு மாதத்தில் துவங்கும் _ மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேட்டிBody:வேலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் வேலூர் புதிய பேருந்து நிலையம் ரூ.46 கோடியில் புதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது இதில் வணிகர்கள் வாகன உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர் திமுக தரப்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் மற்றும் ஈஸ்வரப்பன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர் அதேபோல் வேலூரின் முக்கிய பிரச்சனையாக கருதப்படும் வேலூர் கிரீன் சர்க்கிள் போக்குவரத்து நெருக்கடி பிரச்னையை சரிசெய்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது கூட்டம் முடிந்த பிறகு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் வந்து போக்குவரத்து நெருக்கடியை ஆய்வு செய்தனர் மேலும் போக்குவரத்து நெருக்கடியை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கார் மெக்கானிக் சரவணன் என்பவர் போக்குவரத்தை நெருக்கடியை தீர்ப்பபதற்கான வழிமுறைகள் குறித்து வரைபடம் ஒன்றை காண்பித்தார் அதற்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அவரை பாராட்டி கை குலுக்கினார் அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிக அளவில் இருப்பதால் ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட வழியில்லை பொதுமக்கள் அவசரமாக செல்லும்போது பெரிதும் சிரமப்படுகின்றனர் இங்கே விபத்துக்களும் நடைபெறுகிறது ஒரு சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் விபத்தை தடுக்கவும் எந்த வகையான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது மேலும் புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிகள் ஓரிரு மாதத்தில் துவங்கும் பணிகள் ஒரு வருடம் மற்றும் ஒன்பது மாதத்தில் முழுமையாக முடிக்கப்படும் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிகள் தொடங்குவதற்கு முன்பு தற்காலிக பஸ் நிலையங்கள் எங்கு அமைக்கலாம் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்றார். தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிகள் தொடர்பாக அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஏன் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டதற்கு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ததன் காரணமாக பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிகள் தாமதம் ஆகியுள்ளது என்றுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.