ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் மாடுகளை பராமரிப்பு செய்யாமல் அதன் உரிமையாளர்கள் ஆங்காங்கே விட்டுவிடுகின்றனர். இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் இரண்டு மாடுகள் சினம் கொண்டு சாலையில் சென்ற இரண்டு நபர்களை வேகமாக முட்டி தூக்கி எறியும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த நிகழ்வின் போது மக்கள் சாலையில் பதற்றத்தில் தெறித்து ஓடினர். இனியாவது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: செல்ஃபோன் டவரில் தீ விபத்து - கீழ்ப்பாக்கத்தில் பதற்றம்!