வேலூர் மாவட்டம், கணியம்பாடி அருகே கொல்லைமேடுச் சேர்ந்தவர் சரவணன். சுமார் 4 வருடங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம், கீழவல்லம் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகர் எனபவர், சரவணின் வீடு புகுந்த கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, அங்கிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும், 25 சவரன் நகையையும் கொள்ளையடித்துச் சென்றார்.
கொள்ளயடித்த அந்த பணத்தை தனது வங்கி கணக்கில் டெபாசிட் செய்துவிட்டு உல்லாசமாக வாழ்ந்து வந்த ஞானசேகரை அவரது வங்கி கணக்கு விவரங்களை வைத்தே காவல் துறையினர் கைது செய்தனர். இந்த கொலைவழக்கின் விசாரணை, வேலூர் மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி குணசேகரன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்று. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றவாளி ஞானசேகரன் மீதான தவறுகள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 35 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.7000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், இந்த 35 வருட தண்டனையில் 20 வருட தண்டனையை ஞானசேகர் கண்டிப்பாக அனுபவித்தே ஆக வேண்டும், நன்னடத்தை உட்பட எந்த காரணத்திற்காகவும் அவர் சிறையிலிருந்து வெளியே அனுப்ப கூடாது" என்றும் தீரப்பில் குறிப்பிட்டார்.