வேலூர் மாவட்ட கோட்டை நாணயம், அஞ்சல் தலை சேகரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற நாணயம், அஞ்சல் தலை, கல்வி கண்காட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் பங்கேற்று கண்காட்சியை தொடக்கி வைத்தார். பின்னர் அவர் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பழமையான நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை பார்வையிட்டார். கண்காட்சியில் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் பயன்படுத்திய, பல்வேறு பழமையான பொருட்கள் இடம் பெற்றுள்ளது.
இதனை மாவட்ட ஆட்சியர் ஆர்வமுடன் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்தும், பயன்பாடு குறித்தும் நாணயம், அஞ்சல் தலை சேகரிப்பாளர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து கண்காட்சியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து கூறும் மாணவிகள், கண்காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சி மிகவும் சிறப்புமிக்க அனுபவமாக அமைந்தது மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு விதமான நாணயங்களை ஒரே இடத்தில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வுக்கு 22 ஆயிரம் பேர் ஆப்சென்ட்!