ETV Bharat / state

மது அருந்தி கார் ஓட்டிய விபத்தில் தொழிலதிபர் உயிரிழப்பு

author img

By

Published : Jun 8, 2020, 1:47 AM IST

வேலூர்: மது போதையில் தொழிலதிபர் ஒருவர் காரை வேகமாக ஓட்டி சென்று தடுப்புகளின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

vellore businessman died in a drink and drive car accident
மது அருந்தி கார் ஓட்டி விபத்தில் தொழிலதிபர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம், செதுவாலை இந்திரா நகர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜி (27). இவர் தனது கார் மூலம் வேலூர் வந்துவிட்டு மீண்டும் அதே காரில் மது அருந்திவிட்டு செதுவாலை நோக்கி தனது வீட்டிற்கு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகமாக ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது கொணவட்டம் தேவி நகர் பகுதியில் சென்றபோது, தன் கட்டுப்பாட்டை இழந்த ராஜி, தேசிய நெடுஞ்சாலையின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு விபத்து ஏற்ப்பட்டது. அப்போது, ஏழுமலை என்பவரின் வீட்டிற்கு அருகில் கார் தலைக்குப்புற உருண்டு விழுந்ததில் ராஜி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

vellore businessman died in a drink and drive car accident
கிரேன் உதவியுடன் மீட்கப்பட்ட கார்

பின்னர், உயிரிழந்த ராஜியின் உடலை வேலூர் வடக்கு காவல் துறையினர் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இதையும் படிங்க: வேலூர் மத்திய சிறையில் முருகன் உண்ணாவிரதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.