பொங்கல் பண்டிகையொட்டி வேலூர் மாவட்டம் கே.வி. குப்பத்தை அடுத்த கீழ் முட்டுகூர் பகுதியில் மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, ஆந்திராவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்தன.
பந்தய எல்லையைக் குறிப்பிட்ட நேரத்தில் கடக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பணமும் பரிசுகளும் வழங்கப்பட்டன. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மஞ்சுவிரட்டைக் கண்டு ரசித்தனர்.
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்காக காட்பாடி துணைக் காவல் கண்காணிப்பாளர் துரை பாண்டியன் தலைமையில், 100க்கும் மேற்ப்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் காளைகள் ஓடும்போது அதை பிடிக்க முயன்ற 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இரண்டு பேர் ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'வாவ்... ஜல்லிக்கட்டு!' - அலங்காநல்லூரில் வியந்த வெளிநாட்டினர்