ETV Bharat / state

370 சட்டப்பிரிவு நீக்கம்தான் என் தோல்விக்கு காரணம் - ஏ.சி. சண்முகம்!

வேலூர்: முத்தலாக் சட்டமும், காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கமும்தான் என் தோல்விக்கு காரணம் என வேலூரில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.சி. சண்முகம் தெரிவித்தார்.

காஷ்மீர் 370 பிரிவு சட்டம் தான் என் தோல்விக்கு காரணம் -ஏசி சண்முகம்!
author img

By

Published : Aug 14, 2019, 3:15 AM IST

வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.சி. சண்முகம் சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். தோல்விக்குப் பிறகு ஏ.சி. சண்முகம் திடீரென செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், திமுக சிறுபான்மை மற்றும் இஸ்லாமிய ஓட்டுகளை பெற்று வென்றிருக்கிறார்கள். குறிப்பாக சமுதாய பெயரை சொல்லி, அழுது இந்த வெற்றியை பெற்றுள்ளார்கள். மக்கள் என்னை கைவிட்டாலும், நான் மக்களை கைவிட மாட்டேன் என கூறினார்.

காஷ்மீர் 370 பிரிவு சட்டம் தான் என் தோல்விக்கு காரணம் -ஏசி சண்முகம்!

மேலும் அவர், வேலூர் மக்களவைத் தேர்தல் இவ்வளவு விரைவாக நடக்க நான்தான் காரணம். ஆனால் நூல் இலையில் எங்கள் வெற்றி பறிபோனது. மத்திய அரசு கொண்டு வந்த முத்தலாக் சட்டமும், காஷ்மீரின் 370 சட்டப்பிரிவு நீக்கமும்தான் நான் தோல்வி அடைய காரணம் என தெரிவித்தார்.

Intro:முத்தலாக் சட்டம் காஷ்மீர் 370 பிரிவு சட்டமும் தான் என் தோல்விக்கு காரணம் மேலும் வேலூர் பாராளுமன்ற வாக்காளர்கள் என்னை கைவிட்டாலும் நான் அவர்களை கைவிடமாட்டேன் வேலுர் நாடாளுமன்ற மக்களுக்கு நான் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவேன் - வேலூரில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ சி சண்முகம் பேட்டி. 
Body:வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏசி சண்முகம் சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் வெற்றிக்குப் பிறகு ஏசி.சண்முகம் வாய் திறக்காத நிலையில் இன்று திடீரென அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது
வேலூர் நாடாளுமன்ற தேர்தல் இவ்வளவு விரைவாக நடக்க நான் தான் காரணம். ஆனால் நூல் இலையில் எங்கள் வெற்றி பறிபோனது. இருந்தாலும் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. முதல்வர், துணை முதல்வருக்கும் புதிய நீதி கட்சி சார்பாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்ன். எனக்காக பணியாற்றிய கூட்டணி கட்சிதலைவர்கள் தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசு கொண்டு வந்த முத்ததலாக் சட்டம் மற்றும் காஷ்மீரின் 370 பிரிவு சட்டம் ஆகியவற்றால் தான் நான் தோல்வி அடைந்தேன்

கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க லட்சகணக்கில் வெற்றி பெற்றது ஆனால் இந்த வேலூர் தேர்தலில் 8 ஆயிரம் வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளார்கள். வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி அணைகட்டு, கே.வி.குப்பம், குடியாத்தத்தில் அ.தி.மு.க தான் வென்றுள்ளது. அ.தி.மு.கவை பொறுத்தவரை இது வெற்றி பெற்ற தொகுதியாகவே இருக்கிறது. ஆனால் நாடாளுமன்றத்திர்க்கு செல்ல முடியவில்லை

இந்த முறை எனக்கு வாய்ப்பு இருந்தும் வெற்றி கிடைக்கவில்லை. பத்தோடு11 ஆக தான் தி.மு.க வெற்றி இருக்கும். வேலூர் மக்களுக்கு கிடைத்த ஏமாற்றம். பணியாற்ற வாய்ப்பு இல்லாதது வருத்தம். வென்றவர்கள் என்ன மத்திய அரசு திட்டத்தை கொண்டு வரப்போகிறார்கள் என பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தி.மு.க கூட்டணி வேலூரில் தோல்வியை தழுவியுள்ளது. சிறுபான்மை மற்றும் இசுலாமிய ஓட்டுக்களை பெற்று வென்றிருக்கிறார்கள். குறிப்பாக சமுதாய பெயரை சொல்லி, அழுது இந்த வெற்றியை பெற்றுள்ளார்கள். ஆனால் நாங்கள் மத்திய மாநில அரசின் திட்டங்களை சொல்லி வாக்கு கேட்டோம். வேலூர் மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிச்சயம் செய்வேன். வேலை வாய்பபு முகாம், மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்துவேன். மக்கள் என்னை கைவிட்டாலும், நான் மக்களை கைவிட மாட்டேன். சிறுபான்மை மக்கள் 4 மணிரை வாக்களிக்கவில்லை. வாணியம்பாடி வாக்குகள் கிடைக்கவில்லை என்றால் தி.மு.க வென்றிருக்க முடியாது. ஆம்பூர், வாணியம்பாடி தொகுதியில் தி.மு.கவுக்கு மக்கள் வாக்களிக்கவிட்டால் தி.மு.க 15000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றிருக்கும்

வேலூர் நாடாளுமன்ற தேர்தலி அ.தி.மு.க வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளது. 40% -ல் இருந்து 47 % உயர்ந்துள்ளது" என்றார்
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.