வேலூர்: பனை மரத்தின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் கணியம்பாடி அடுத்த சலமநத்தம் பகுதி காவலர் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் சுமார் 5 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் சுமார் 700 காவலர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை சுற்றியும், சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தனர்.
ஏற்கனவே, இப்பகுதியில் பசுமையை பாதுகாக்கும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை காவல் துறையினர் நட்டு வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.