வேலூர்: பழைய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் மோப்பநாய் அக்னி உதவியுடன் இரவு நேரங்களில் கார் மற்றும் ஆட்டோக்களில் சோதனை நடத்தினர். மேலும் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிந்த நபர்களின் விவரங்களை போலீசார் சேகரித்தனர்.
பின்னர், சைதாப்பேட்டை மெயின் பஜார் பகுதியில் வெளிமாநிலம் மற்றும் வெளி நாட்டினர் தங்கும் விடுதிகளில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையிலான 100 போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து நள்ளிரவு நேரத்தில், சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் தங்கியுள்ளார்களா? என சோதனை நடத்தினர்.
அப்போது விடுதிகளில் தங்கி இருந்தவர்களிடம் போலீசார் பாஸ்போர்ட் விசா உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். மேலும் சந்தேகத்திற்கிடமாக இருந்தவர்களை எஃப்.ஆர்.எஸ் செயலி (face recognition system) மூலம் போலீசார் பரிசோதனை செய்தனர்.
இதையும் படிங்க:வாகனவோட்டிகள் கவனம்: 2 பைக்குகளுக்கு மேல் வரிசையாக செல்லக்கூடாது