ETV Bharat / state

பயன்படுத்தாத செட்டாப் பாக்ஸ்களை ஒப்படைக்க வேண்டும் - வேலூர் ஆட்சியர்! - தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி

வேலூர்: பயன்படுத்தப்படாமல் உள்ள அரசு கேபிள் டிவி நிறுவன செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்கள் உடனடியாக ஆப்ரேட்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்
வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்
author img

By

Published : Nov 13, 2020, 3:51 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட இலவச செட்டப் பாக்ஸ்கள் பழுதடைந்தாலோ, கட்டணம் செலுத்தாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தாலோ, ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டுச் சென்றாலோ அவற்றை, உடனடியாக சம்மந்தப்பட்ட ஆப்ரேட்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

அரசு வழங்கிய செட்டப் பாக்ஸ்கள் மாத சந்தா கட்டணத்துடன் ஒளிபரப்பு செய்ய மட்டுமே தவிர, உரிமை கொண்டாட அல்ல. அப்படி பயன்படுத்தாமல் உள்ள செட்டப் பாக்ஸ்களை ஒப்படைக்க தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அரசு கேபிள் டிவிக்கு 30 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் - உடுமலை ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.