திருப்பத்தூர் மாவட்டம் சௌடேகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு கவிபாரதி, விக்னேஷ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ராமு, அருண், விநாயகம், பிரவீன் மற்றும் சிவா ஆகியோர் பொங்கலை ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடியுள்ளனர்.
அப்போது, கவிபாரதி, விக்னேஷ் ஆகிய இருவரையும் இந்த ஐந்து பேரும் தவறான வார்த்தையால் பேசித் திட்டியதாக தெரிகிறது. இதனை தட்டிக்கேட்ட இரண்டு பேரையும் ஐந்து பேர் கொண்ட கும்பல் இரும்புக் கம்பி மற்றும் கிரிக்கெட் மட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனை விசாரித்த தந்தை முருகனுக்கும் பலத்த அடி விழுந்துள்ளது. பலத்த காயமடைந்த மூவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனத்தொடர்ந்து, பொங்கல் தினத்தன்று நடந்த சம்பவம் தொடர்பாக திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் நடத்துநர் முருகன் புகார் கொடுத்துள்ளார். ஆனால், புகார் கொடுத்தும் காவல்துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில், நடத்துநர் முருகனின் உறவினர்கள், திருப்பத்தூர் வழியாக சேலம் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னயில் 93.5 விழுக்காடு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து!
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி உறவினர்களிடம் சமரசத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.