ETV Bharat / state

வேலூர் அருகே ட்ரான்ஸ்பார்மர் வெடிப்பு.. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் அணைக்கப்பட்ட தீ!

Transformer Explosion near Vellore: வேலூர் அருகே ஆயில் ட்ரான்ஸ்பார்மரில் உள்ள மின்கலன் சாதனம் திடீரென வெடித்து தீப்பற்றியதால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மின் விநியோகம் சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Transformer explosion near Vellore has affected power supply
வேலூர் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்து மின் விநியோகம் பாதிக்கப்பட்டது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 7:31 PM IST

வேலூர் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்து மின் விநியோகம் பாதிக்கப்பட்டது

வேலூர் அருகே 20 ஆயிரம் லிட்டர் கொண்ட ஆயில் ட்ரான்ஸ்பார்மரில் உள்ள மின்கலன் சாதனம் திடீரென வெடித்து தீப்பிடித்ததால், வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மின் விநியோகம் சீரமைக்கும் பணியில் மின்சாரத் துறையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர் அருகே சேண்பாக்கம் பகுதியில் மின்சார வாரியத்திற்கு சொந்தமான துணை மின்பகிர்மான நிலையம் உள்ளது. இந்த நிலையில் இன்று (நவ. 26) பிற்பகலில் அங்குள்ள சுமார் 20 ஆயிரம் லிட்டர் கொள்கலன் கொண்ட ஆயில் ட்ரான்ஸ்பார்மரில் உள்ள மின்கலன் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது.

இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் புகை மண்டலமாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்தனர். பின்னர் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் வேலூரின் சில பகுதிகள், சேண்பாக்கம், முள்ளிப் பாளையம், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் சில மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த தீவிபத்து குறித்து மின் பொறியாளர் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யும் பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் மின் விநியோகம் சீர் செய்யப்படும் எனவும் வேலூர் மின் பகிர்மான கோட்ட பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்களை தமிழக அரசு ஏமாற்றுகிறது" - தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.