வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், வட்டார வள மையம் சார்பில் சோளிங்கரிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி இன்று நடைபெற்றது. இதில், அரசுப் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் என 762 பேர் கலந்துகொண்டனர்.
அப்போது, பள்ளியில் ஆசிரியர்களின் கடமைகள் என்ன என்பது குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் வருகைப் பதிவு, குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமைகள், கற்றலின் புதுமைகள், பேரிடர் மேலாண்மை, பாலின பாகுபாடு களைதல், குழந்தைகள் உரிமைகள் உள்ளிட்டவை குறித்து ஆசிரியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், பள்ளி மேம்பாட்டுத் திட்ட வரைவு, உள்கட்டமைப்பு, பராமரிப்பு பணிகள், பள்ளி மேலாண்மைக் குழு, பள்ளி நிதியை பயன்படுத்துதல், சமூக தணிக்கை மற்றும் பள்ளி முழுமை தரநிலை உள்ளிட்டவை தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: வடகலை - தென்கலை விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு