வேலூர் : வாணியம்பாடி அருகே நேதாஜி நகர் பகுதியில் 20 ஆயிரம் லிட்டர் அளவு கொண்ட 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினருமான நிலோபர் கபில், மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மேலும், பெருமாள் பேட்டை பகுதியில் 8.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடையை ரிப்பன் வெட்டி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்.
பின்னர் அங்கு கூடி இருந்த மக்களுடன் எளிமையான முறையில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இதில், அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:அச்சுறுத்தும் கரடிகள்... அச்சத்தில் தேயிலைத் தோட்ட ஊழியர்கள்