ETV Bharat / state

மின் வாரிய ஊழியர்கள் முற்றுகை போராட்டம் - திருச்சி தலைமை பொறியாளர் அலுவலகம் முற்றுகை

வேலூர், திருச்சி: மின் வாரிய ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர், திருச்சியில் மின் வாரிய ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
author img

By

Published : Oct 10, 2019, 11:47 PM IST

வேலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருபத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் மாவட்ட மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் பங்கேற்ற ஊழியர்கள் மின் வாரியத்தில் பணிபுரியம் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரபடுத்துவது, ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்தி ரூ.380 கூலி வழங்க வேண்டும், புயல் காலங்களில் பணியாற்றியபோது அமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், கேங்க்மேன் பணி நியமனத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். பின்னர் முற்றுகை போராட்டம் நடதியவர்களை காட்பாடி காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதேபோல் திருச்சியிலும் சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தென்னூரில் உள்ள மின்சார வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதற்கு சிஐடியு மாநில துணைத் தலைவர் ரங்கராஜன் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் அகஸ்டின், மாநில துணைத் தலைவர் ராஜாராமன், பெரம்பலூர் வட்ட செயலாளர் பன்னீர்செல்வம், பெரம்பலூர் வட்ட பொருளாளர், கண்ணன் ஆகியோர் விளக்க உரை ஆற்றினார்.

வேலூர், திருச்சியில் மின் வாரிய ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
சிஐடியு திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் வாழ்த்துரையாற்றினார். இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

அப்போது மாநில துணைத் தலைவர் ரங்கராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமனம் செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்களே மின்சார வாரியத்தில் இல்லை என்று அதிகாரிகள் சென்னை தலைமை இடத்துக்கு அறிக்கை அனுப்புவது கண்டிக்கத்தக்கது. கஜா புயலின் போது ஒப்பந்த தொழிலாளர்கள் சிறப்பாக பணியாற்றினார்கள் என்று பலரும் பாராட்டினர். அதனால் அத்தகைய ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்திய ஜிடிபி சரிவில் இருப்பதாக கணித்த மூடீஸ்..! வெளியான பகீர் தகவல்

Intro:வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்ட மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முற்றுகை - 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கைதுBody:தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இன்று வேலூர் திருபத்தூர் கிருஷ்ணகிரி தருமபுரி பகுதியில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது இதில் பங்கேற்ற ஊழியர்கள், மின் வாரியத்தில் பணிபுரியம் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரபடுத்துவது ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்தி ரூ.380 கூலி வழங்க வேண்டும் புயல் காலங்களில் பணியாற்றியபோது அமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் கேங்க்மேன் பணி நியமனத்தில் ஒப்பந்த ஊழியர் களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் காட்பாடியில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள் பின்னர் முற்றுகை போராட்டம் நடதியவர்களை காட்பாடி போலீசார் கைது செய்து தனியார் திருமண மணடபத்தில் அடைத்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.