திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்த மலைப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரிலும் திருப்பத்தூர் மது அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் ஜவ்வாதுமலை, புதூர்நாடு, மேற்கத்தியானூர் ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, கள்ளச் சாராயம் விற்பனை செய்து வந்த தருமன், துளசி, திருப்பதி ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அங்கிருந்த சாராயம் காய்ச்சும் பிளாஸ்டிக் பேரல், மண்பாணைகள், அலுமினிய பாத்திரங்கள் ஆகியவற்றை உடைத்தனர். மேலும் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 லிட்டர் சாராயத்தை அழித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைத்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், 'திருப்பத்தூர் பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கள்ளச் சாராயம் விற்பனை செய்தாலோ, காய்ச்சினாலோ அவர்கள் சுவர் மீது குண்டர் சட்டம் பாயும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மனைவியக் கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவன் கைது