ETV Bharat / state

கிருபானந்த வாரியார் சிலைக்கு அமைச்சர், ஆட்சியர் உட்பட பலர் மலர் தூவி மரியாதை

kirupananda variyar day: திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்தநாளையொட்டி காட்பாடி, காங்கேயநல்லூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

thirumuruga kirupananda variyar
திருமுருக கிருபானந்த வாரியார்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 5:24 PM IST

வேலூர்: காட்பாடி அருகே காங்கேயநல்லூரில் 1906 ஆண்டு, ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறந்தவர் திருமுருக கிருபானந்த வாரியார். இவர் தனது தந்தை மல்லையதாசர் பாகவதரிடம் கல்வி, இசை, இலக்கியங்கள் கற்று 8 வயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றிருந்தார். 12 வயதுக்குள்ளாக பதினாராயிரம் பண்களை கற்று, தனது 18வது வயதிலேயே சிறப்பாக ஆன்மீக சொற்பொழிவாற்றும் ஆற்றல் கொண்டிருந்தார்.

தீவிர முருக பக்தரான இவர் நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகள் நிகழ்த்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். சமயம், இலக்கியம், பேச்சு, எழுத்து, இசை என பன்முக புலமை பெற்ற இவர் தனியாகவே புராண பிரசங்கங்களும் செய்து வந்தார். இவரது பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கையொட்டி அமைந்திருந்ததால் பாமர மக்களின் உள்ளங்களையும் தன் பேச்சாற்றலால் கவர்ந்திருந்தார்.

இதன்மூலம் கிருபானந்த வாரியார் 'அருள்மொழி அரசு' என்றும் 'திருப்புகழ் ஜோதி' என்றும் அனைவராலும் பாராட்டப்பெற்றார்.
இவர் 150க்கும் மேற்பட்ட ஆன்மீக நூல்களை இயற்றியதுடன், 500க்கும் மேற்பட்ட ஆன்மீக கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ஆன்மீக சொற்பொழிவுக்காக லண்டன் சென்றுவிட்டு 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி தாயகம் திரும்பும் வழியில் கிருபானந்த வாரியார் விமானத்திலேயே சித்தி அடைந்தார்.

இவருக்கு காட்பாடி காங்கேயநல்லூரில் இறுதி சடங்குகள் செய்யப்பட்ட அதே இடத்தில், முழு உருவச்சிலையுடன் தனிக்கோயிலும் நிறுவப்பட்டுள்ளது. பெருமை மிகுந்த கிருபானந்த வாரியாருக்கு மரியாதை சேர்க்கும் விதமாக கடந்த 2021ஆம் ஆண்டு முதல் அவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், கிருபானந்தவாரியார் பிறந்தநாளையொட்டி காங்கேயநல்லூர் கோயிலுள்ள அவரது சிலைக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், மேயர் சுஜாதாஆனந்தகுமார் உள்பட பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல், அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலர் எஸ்.ஆர்.கே.அப்பு உள்பட முக்கிய பிரமுகர்களும் கிருபானந்த வாரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், கிருபானந்த வாரியார் குடும்பத்தினர், பல்வேறு துறை அலுவலர்கள் என பல பங்கேற்றனர்.

இதையும் படிங்க: எட்டப்பர்களுக்கு அதிமுகவில் இடம் இல்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.